565 இராம பாணத்தால் இராவணன் இறந்தது சந்த விருத்தம்-98 தூவிமுடிக்கயி லாசம்எடுத்திரு நாலுமதக்கரி யைச்சாடி சூரியனைத்திசை மாறவிடுத்தொரு சூறையடித்த மிடுக்காலே பூவுலகத்தவர் கீழுலகத்தவர் மேலுலகத்தவர் தப்பாதே பூசைசெலுத்திட ஆண்மைசெலுத்துபு யாசலமிக்க தசக்ரீவன் ஆவல்மிகுந்தொரு சீதைபொருட்டினில் வீரமும்வெற்றியும் முக்கோடி ஆயுசும்மட்டிடொ ணாதஅரக்கரும் ஆடலம்ஒக்க விடுத்தேபின் யாவரும் இக்கதை ஆரமுதொப்பென வேதினம்உத்தமர் கற்றோத ராமசரத்தினில் மாமலைஒத்தஇ ராவணனிப்படிப் பட்டானே ------ அண்ணன் இறந்ததற்காக விபீஷணன் புலம்பல் விருத்தம்-99 நிருதனிவ் வாறழிந்தபின்பு சாமிதேரில் நின்றிறங்கி இவன் முதுகில்வடு வேதென்றான் வரும்முதல்நாள் அனுமான்கைக் குத்தால்வந்த வடுஎனவீடணன் சொல்ல மகிழ்த்தானிப்பால் அருளும்ஐயன் ஏவலினால் இவனும் போனான் அண்ணா அண்ணா என்றே அண்ணன் மேலே ஒருமலைமேல் ஒருமலைபோல் வீழ்ந்து கண்ணீர் ஒழுகின்றான் பழமைசொல்லி அழுகின்றானே திபதை-14 ஆகிரிராகம் அடதாளசாப்பு கண்ணிகள் 1. உண்டாற் கொல்லும் விஷம் உலகத்தில் எங்கெங்கும் உண்டே அண்ணாவே-சீதைஎன்ற கண்டாற் கொல்லும் விஷம் உன்னிடத்திலே மாத்திரம் கண்டேன் அண்ணாவே 2. இந்த அநியாயத்தை பிரம்மாவிடம் சொல்ல இறந்தாயோ அண்ணாவே |