பக்கம் எண் :

566

  பந்தித்த ஆசையும் உயிரோடேகொண்டு
     பறந்தாயோ     அண்ணாவே

3. உள்ளதோ சீதையைத் திருடுவதென்ற என்னை
     ஓட்டினாய்      அண்ணாவே உலகிலே
  கள்ளனுக்குக் கூவென் றவன்மேல் பகைபோலக்
     காட்டினாய்      அண்ணாவே

4. அடிநாளை சாபத்தீடு சீதையாய் வந்ததென்றேன்
     அலைந்தாயே    அண்ணாவே-உடம்பெங்கும்
  சுடுகிற செந்தலை மடிமேலே கட்டித்
     தொலைந்தாயே  அண்ணாவே

5. நினையாதே சீதையைக் குலையும் வாழ்வென்றசொல்
     நிறைந்ததோ     அண்ணாவே-ராமனை
  மனிதன் மனிதன் என்ற வாயும் துடுக்கும்எங்கே
     மறைந்தாயோ    அண்ணாவே

6. வள்ளல் கும்பகர்ணன் மாலியவான் சொல்லியும்
     மருண்டாயே    அண்ணாவே-அடங்காமல்
  துள்ளின மாடுபொதி சுமக்கும் என்றாற்போலே பட்டுச்
     சுருண்டாயே    அண்ணாவே

7. சுற்றமும் சேனையும் உன் பத்துமுடியும் முதல்நாள்
     சோர்ந்தாயே    அண்ணாவே-எல்லாரும்
  செத்தபிற காகிலும் ராமனை தெய்வமென்று
     தேர்ந்தாயே     அண்ணாவே

8. பரந்த கயிலாசமும் உன்னுடைய தோளுக்கு
     பற்றுமோ       அண்ணாவே-தோள்மேலே
  சுரந்து குரங்குக் கூட்டம் இப்போ தணியணியா
     தொத்துமோ     அண்ணாவே

9. விரிந்த தேவர்க்கெல்லாம் கடைக்கண் கொடாமல்வெடு
     வெடுத்தாயே    அண்ணாவே-களத்திலே
  பருந்தும் கழுகும்கொத்த முழுமுழுக் கண்கொடுத்துப்
     படுத்தாயே      அண்ணாவே

10. பூமலர் அம்புகளைக் காமன்கை எய்தெய்து
     பொழிந்ததே     அண்ணாவே-இப்போதிந்த