பக்கம் எண் :

567

  ராமன் எய்தபிறகு காமன் எய்கிறதெல்லாம்
     இழிந்ததே           அண்ணாவே

11. சிறுமதி கொண்டல்லவோ மறுபெண்கள் மேலாசை
     திரண்டாயே          அண்ணாவே-அவரவர்
  பொறுமை இடித்தல்லவோ மண்ணென்கிற பெண்மேலே
     புரண்டாயே     அண்ணாவே

12. பிரமாதி தேவர்கள் தந்தவரங்கள் எங்கே
     பிரிந்ததோ      அண்ணாவே-இன்றைக்கெம
  தருமரா சனுக்கும் உன்னைத் தின்றுதொந்தி
     சரிந்ததோ      அண்ணாவே

------

மண்டோதரி புலம்பல்

விருத்தம்-100

    நாடிவிபீ ஷணன்இவ்வா றழுதபோது
          நல்லசாம்புவன் தேற்றத் தெளிந்தான்இப்பால்
    பாடல்செய்யும் மடமாதர் அரக்கர் மாதர்
          பாதாள மாதர்முதற் பலரும் சேர்ந்து
    கூடமண்டோ தரியங்கே கொள்கொம் பில்லாக்
          கொடிபோல ராவணன் பேருடல்மேல் வீழ்ந்து
    தேடரிய துணையிழந்த கிளிபோல் வாயைத்
          திறக்கின்றாள் அழுதழுது பறக்கின்றாளே

திபதை-15

காம்போதிராகம்                               ஆதிதாளம்

கண்ணிகள்

1. என்னசெய்வேன் என்னசெய்வேன் மைந்நாத மைபோ லுன்னை
     இங்கேகண்டு நொந்தோன் நொந்தேன் லங்கைமன்னவா-ஐயோ
  உன்னுயிரைக் கொன்றநமன் என்னுயிரும் கைக்கொள்ளானோ
     ஓடியிதோ வந்தேன் வந்தேன்       லங்கைமன்னவா

2. கண்ணான பேர்களையெல்லாம் புண்ணாக்கி வீடணனென்னும்
     கரும்பையும் வேம்பாக்கிவிட்டாய்     லங்கைமன்னவா-ஐயோ