பக்கம் எண் :

568

  பெண்ணான சீதைபிறக்க லங்கை அழிந்துபோம் என்ற
  பேச்சையே மெய்யாக்கியேவிட்டாய்   லங்கைமன்னவா

3. தினம்இந்த லோகத்திலேநீ தேவராலும் சாகாய்என்று
  சிந்தைமகிழ்ச்சி ஆனேனே      லங்கைமன்னவா-ஐயோ
  வினைபோலிந்த நானிலொரு மனிதனாலேசாவாயென்று
     விதியறியமாற் போனேனே   லங்கைமன்னவா

4. சீதைஆசையை வெளியில் ஓதாமல் அடக்கிக்கொண்டு
     செருக்களத்தில் தூங்கிறாயோ    லங்கைமன்னவா ஐயோ
  ஏதையா சொர்க்கலோகத்து மாதருக்குள் உனக்கேற்க
     எந்தப்பெண்ணைக் காண்கிறாயோ லங்கைமன்னவா

5. எட்டானைக் கொப்பு பிடுங்க ஒட்டாமற் கெட்டியாகக் கட்டி
     இருக்கின்ற மணிமார்பாச்சே   லங்கை மன்னவா-ஐயோ
  சட்டமாக ராமன் அம்பு பட்டாடைமேல் ஊசிபோலத்
     தட்டாமல் உருவிப்போச்சோ  லங்கை மன்னவா

6. ஊரிலே சீதைமேல் வைத்த ஆசையிந்த மட்டும்எங்கே
     ஒளித்திருந்து வாதிச்சதே     லங்கை மன்னவா-ரகு
  வீரன்பாணம் உன்உடம்பை எலிவெட்டிச் சோதிக்கிறாபோலே
     வெட்டியின்று சோதிச்சதே    லங்கை மன்னவா

7. அனர்த்தமா விளையும் அய்யோ நினைக்காதே சீதையைஎன்றேன்
     அன்று கேளாமல் வைதாய்    லங்கை மன்னவா-நான்
  உனக்குமுந்திக் கொள்ளாதமுன் எனக்கு நீமுந்திக்கொண்டாயே
     ஓரவஞ்சகம் செய்தாயே       லங்கை மன்னவா

8. நங்கைசூர்ப் பநகிதனான் நங்கையை எடுக்கச்சொல்லி
     நமன்போல் வந்து நின்றாளே      லங்கைமன்னவா-ஐயோ
  என்கழுத்தும் பாவியவள் தன்கழுத்தைப் போலே ஆக்க
     எண்ணியே உன்னைக் கொன்றாளே லங்கைமன்னவா

9. அந்தமரம் சீதையை ஆரும் வந்தனை செய்யும் தெய்வத்தை
     ஆரோபோல் ஆசைப்பட்டாயே    லங்கைமன்னவா-ஐயோ
  இந்தமரத்தை வெட்டினால் இந்தஇடத்திற் சாயுமென்
     றெண்ணாமல் புத்திகெட்டாயே     லங்கைமன்னவா

10. வேதன்முதலோர் வரப்பிர சாதத்தால் மூவுலகுக்கும்
     வேந்தன்என வாழ்ந்திட்டாயே      லங்கைமன்னவா-ஐயோ