569 சீதையாம் புரைமோரிட்டு வாழ்வாம்பாற் கடல்கெடுத்துத் தெருவிலே என்னை விட்டாயே லங்கைமன்னவா ----- சீதாதேவிக்கு அனுமான் ஜெயசேதி கூறுதல் விருத்தம்-101 ஆனமண்டோ தரியிவ்வா றழுது சோர்ந்தாள் அரக்கனுக்குக் கடன் விபீஷணனும் செய்தான் வானரவேந் தனும்தம்பி தானும் செம்பொன் மௌலிவைக்க இலங்கையபி ஷேகம் கொண்டான் மானவனும் மாருதியை ஏவத் தான்போய் வாடியதோர் பயிர்க்குமழை பொழிந்தாற் போல சானகிதன் காதில்இரா வணன்போய் வீழ்ந்த தனம்சொல்வான் மகிழ்ந்துசோ பனம்சொல்வானே தரு-81 மத்தியமாவதி ராகம் ஆதிதாளம் பல்லவி சோபனம் சொல்லவந்தேன் உன்தன் தொண்டன் அனு மந்தன் அநுபல்லவி சோபனம் சானகித்தாயே முந்தமுந்த சுவாமி ராம காரியமே செயம்அந்த (சோப) சரணங்கள் 1. ராமசாமிவிடும் ஒருகணைபட்டு ராவணன் உயிர் விட்டு-ஒரு மாமலைபோல் தரையின்மேல் வீழ்ந்தானே வைகுந்தம் சேர்ந்தானே இந்த-(சோப) 2. தேவர்முனிவர்சிறை நீங்கிமுன்போலே செழிப்பாய் உன்னாலே- பொல்லாப் பாவியரக்கன் பயங்கரம் விண்டாரே பதவிகள் கொண்டாரே-இந்த (சோப) |