பக்கம் எண் :

570

3. இங்கேமுன்மோதிரம் தந்துதானே இருஎன்று சொன்னேனேஇப்போது
  அங்கேநீ எழுந்தருள எம்மானே அனுக்கிரகம் செய்தானே-இந்த
                                                    (சோப)

4. சந்திரன் இந்திரன் தேவர்க்குஸ்தபானம் சகலர்க்கும் சோபனம்ஆகும்
 இந்த அரக்கியரை நான்கொல்லவேணும் எனக்கிது சோபனம் காணும்-இந்த
                                                     (சோப)

------

சீதோதேவி அனுமாரை உபசரித்தல்

விருத்தம்-102

கனம்மலர்ந்த ராமதூ துவனிது சோபனஞ் சொலக் காதிற் கொண்டாள்
தினம்மலர்ந்த சாமிதிரு வடிமலரைத் திசைநோக்கித் தெண்டனிட்டாள்
தனம்மலர்ந்தாள் அகம்மலர்ந்தாள் முகம்மலர்ந்தாள் என்அன்னை
                                             சனகி முன்னாள்
மனமலர்ந்த குறையெல்லாம் மாற்றினாள் அனுமானை வாழ்த்தினாளே. 

தரு-82

மோகன ராகம்                            ஆதிதாளம்

பல்லவி

எந்நாளும் வாழிநீ தானே - என்தெய்வம்
உன்னைப்போல் உண்டோ அனுமானே            (எந்நா)

அநுபல்லவி

தென்னிலங்கை அரக்கன் தன்னைப்பட்சித் தாயே
பின்னை மங்களம் சொல்லி என்னை ரட்சித் தாயே  (எந்நா)

சரணங்கள்

1. இருக்கும்சிறை மீட்பேன் என்ற      வாக்கியம்-என்முன் 
  உரைத்தபடி செய்தாயே என்        பாக்கியம்-அப்பாஉன்
  கருத்தில்நீ பிடித்ததேவை           ராக்கியம்-உனக்குப்
  பெருத்த மூவுலகும் கொடுத்தென்னசி  லாக்கியம்
  சிரத்தினால் வணக்கம் செய்வதே     யோக்கியம் (எந்நா)