571 2. மனத்தில் அடங்கா விசாரம்-நீக்கி எனக்கிது நீதந்த சரீரம்-அய்யா இனிச்சொல்வ தென்ன உபசாரம்-அங்கே தனித்த சாமிக்கும் செய்தாயே ஆதாரம் உனக்கு நானென்ன செய்வேன் உபகாரம் (எந்நா) 3. இதமாம்என் சொல்லொன்றும் தடாதே-கோபம் இவ்வரக் கியர்மேல் எடாதே-இன்னம் உதவிசெய் யும்செய்கை விடாதே-வரங்கள் எதுவும்தந் தேன்நீ இனிபயப் படாதே முதல்வர் மூவருக்கும் முதுகு கொடாதே (எந்நா) ------ சீதாதேவி அக்கினியில் குளித்து எழுந்தது விருத்தம்-103 செவிக்கே சுபம்சொல் அனுமானைத் தேவி இவ்வாழிகள் சொன்னாள் தீரவிபீஷணனும் சென்றான் திருச்சேவைக்குச் சமயமென்றான் புவிக்கோர்தாயே வருகென்றான் பூவைபழங்கோலங் கொண்டான் பூவாகனமேற் சென்றையன் புனைதாள் அம்மை பணிந்துநின்றாள் தவத்தோர்க் கருளும்சீராமன் தனதுகுறிப்பு வேறாகச் சாமி அடியேன் செய்தபிழை சகிப்பாய் என்றாள் தலைமேற்கை குவித்தாள் முக்கால் வலம்வந்தாள் கொழுந்தன் வளர்த்தசெழுந்தணலிற் குதித்தாள் அப்போ தெழுந்தமருக் கொழுந்தாய் சீதை எழுந்தாளே. தரு-83 பிலகரி ராகம் ஆதிதாளம் பல்லவி எழுந்தாளே பூங்கோதை எழுந்தாளே சீதை (எழுந்) அநுபல்லவி கொழுந்துபோல் ஒளிஓங்கி குதித்த செந்தணல் நீங்கி (எழுந்) சரணங்கள் 1. புரந்தரன் இந்திராணி பூமேல் ஆரணண் வாணி பூதேசன் சர்வாணி அருந்தவன் உடன்கூட அருந்ததியும் கொண்டாட அமரர் சோபனம்பாட பூமலர்போட (எழு) |