பக்கம் எண் :

572

2. திருமேனி தனில்வன்ன        செழுமஞ்சள் ஒளிமின்ன
     திசையெங் கும்பளபளென்ன
 தருமம் புகழ்ந்துள்ள            தழைக்கும்எழுபது வெள்ள
     சகலசேனையும் மெய்ய      கவலை தள்ள (எழு)

3. மலரடி கசங்காமல்             மணிக்கூறை மசங்காமல்
     மாலைவண்டசங்காமல் 
  கலவைஈரம் வாங்காமல்         கனிவாய் நகை நீங்காமல்
     கண்டோர்கள் ஏங்காமல்     க்ஷணம் தாங்காமல் (எழு)

4. குங்குமம் புலராமல்           குழல்மேல்வை மலராமல்
     கூந்தற்பூ உலராமல்   
  அங்கே ராமன் முன்னாலே     அக்கினிதேவன் கைமேலே
     அலர்ந்த தாமரைப் போலே  மின்னலை போலே (எழு)

-----

அக்கினி பகவான் முறையிடல்

விருத்தம்-104

எழுந்ததோர் சீதைதன்னை ஏந்திய அக்கினிதேவன்
செழுந்துழாய் மாலை ராமன் திருமுன்னே வைத்து வீழ்ந்தான்
புழுங்கினேன் சாமி இந்த பூவைகற் பென்னும் தீயால்
அமுங்கினேன் எனத்தன் வாய்மேல் அறையிட்டான் முறையிட்டானே.

தரு-84

பியாகடைராகம்                               ஆதிதாளம்

பல்லவி

என்ன பிழை செய்தேன் சாமிநான் அக்கினிதேவன்
ஏது பிழைகள் செய்தேன் சாமி                   (என்)

அநுபல்லவி

பன்னிச் சீதைதன்னை       என்னில் இடுவித்தாயே
பதிவிராதாக் கினியாலே     என்னைச் சுடுவித்தாயே (என்)

சரணங்கள்

1. எந்தப் பொருளையும்     கடுவதெனது சென்மம்
     என்னையும் சுட்டதிந்த அன்னைபத்தினி தன்மம்