பக்கம் எண் :

573

  வேதத்திலும் எனையல்லாமல் உண்டோஒரு கன்மம்
     மெய்யாய் விளங்குமென்மேல் செய்யலாமோ வன்மம் (என்)

2. பாலும் பதக்கு மோரும்   பதக்கென்றெண்ணப் போமோ
     பைந்தோடி சீதைக்கிணை    எந்தப் பெண்கள் தாமோ
  நாலும் தெரிந்தும் இந்தக்  கோலம் செய்யல் ஆமோ
     நங்கை இவளாலே என்     அங்கம் இப்படி வேமோ (என்)

3. நீதி அனுமான் சொன்ன       சேதிக்கும் உண்டோ லோபம்
     நினைப்பறிந்தும் சோதித்தாய் உனக்கிதில் என்ன லாபம்
  சோதி அருந்ததிக்கும்          சீதைக்குண்டு பிர தாபம்
     சொன்னேன் சத்தியம்  இதற்கென்மேல்என்னகோபம் (என்)

------

ஸ்ரீராமர் சீதாதேவியை அங்கீகரித்தல்

கலித்துறை-1

மாட்சி இவ்வாறு சொல் அக்கினிதேவனை வள்ளல் கண்டான்
சாட்சி எல்லாருக்கும் நீயே சனகிக்கும் சத்தியம் சொன்னாய்
மீட்சி செய்வார் என்றுவிட்டான் அப்போது மிதிலைவல்லி
காட்சி செய்ராகவன்முன்னே யிருந்து களித்தனளே.

பிரம்மதேவர் ஸ்ரீராமரைத் தோத்திரம் செய்தல்

விருத்தம்

அன்னம் போல் இவ்வா றெழுந்தாளை அருளால் நோக்கி ராகவனும்
கனம்சேர் கென்றான் சனகிகுணம் கண்டு துதித்தான் பிரம்மாவும்
நினைந்தான் சாமிநின்மகிமை நீயே அறிவாய் சீதையின்மேல்
சினந்தான் ஏதென்றவள் பெருமை தெரிப்பான் புகழ்ந்து விரிப்பானே.

திபதை-15

பூபாளராகம்                              அடதாளசாப்பு

கண்ணிகள்

1. பரராமா ரவி குலராமா புச
     பலரா மாகோ சலராமா