பக்கம் எண் :

574

  சரராமா மனோ கரராமா சௌந்
     தரராமா ஆ யிரநாமா             ராமராமா

2. பள்ளமாயை இதற்குள்ளே புகுந்தெவர்க்கும்
     பரமபதந்தருவாய்      என் கோவே
  கள்ளனுமாய் நின்று விளக்கும் பிடிக்கிறாய் உன்
     கபட்டை ஆரறிவார் என் கர்த்தாவே-ராமராமா

3. முக்காடிட்டபிள்ளை முன்னின்ற பிள்ளையல்லால்
     முதற்குட்டின பிள்ளையை    அறியாதே
  இக்காரியம் போல ஒன்றையொன்றெதிர் காட்டி
     இடைநின்ற உனைக்காண்ப   தெப்போதே-ராமராமா

4. நீதியா நாலாறு பேருக்குள் ஒருவனை
     நீக்கி அருளும் வித்தை     பூண்டாயே
  ஆதிமூலம் என்ற நாதத்திற் பதம் வைக்க
     ஆனைக்கு முன்னேவந்     தாண்டாயே-ராமராமா

5. கயிற்றைப் பாம்பென்றெண்ணி கலங்கும் வண்ணம் ஒரு
     கருக்கல் உண்டாகிய        வகைபோலே
  மயக்கத்திலே நாங்கள் மயங்கும் வண்ணமிந்த
     மயக்கங் காட்டலாமோ      நெடுமாலே-ராமராமா

6. ஞாலம் தண்ணீர் அனல் வளிவெளி இவற்றைந்து
     நாலும் மூன்றிரண்டொன்றாம்    அதிகாரா
  கோலம் மானிடங்காட்டி ஆளுக்குள்ளே ஆளாய்
     குறுகுறுக்கிறதென்ன           ரகுவீரா-ராமராமா

7. மாயைதனைப் படைப்பாய் மாயையும் துடைப்பாய்உன்
     வல்லமை அறியாதல்       லோபூமி
  மாயைக்குள் திரும்பவும் மயக்கங் காட்டினால் உன்
     மகிமையை அறிவதெப்      படிசாமி-ராமராமா

8. நீயும் சீதையும்பெற்ற தாயும் தந்தையும் என்றே
     நினைக்கிறோம் நாங்கள் ச   தாகாலம்
  தாயிவள் மகிமையைப் புவிக்குப் காட்ட வேண்டிச்
     சாமிநீ செய்தாயோ         இக்கோலம்-ராமராமா

9. கனிவினாலே எந்த உயிரும் உயிருக்குள்ளே
     கருத்தும்நீ தெரிவாயே      பெரியோனே