575 சனகி கருத்து மாத்திரம் தெரியாது போலிந்திர சாலம் செய்யலாமோ நீதானே-ராமராமா 10. அக்கினியையும் சுடும் அக்கினி சீதைஎன்று அக்கினி அறிந்ததே இவள்சூட்சி இக்கோலம் ராவணன் தீண்டாமல் நிலத்தோடே எடுத்தானே இதைவிட என்சாட்சி-ராமராமா 11. தீயையும் பிழைசொன்ன வாயையும் வடவைச் செந் தீயையும் சுடுமிவள் பிரதாபம் வாய்புளித் ததோமாங் காய்புளித்ததோ என்று மனதில் எண்ணினாலும் வெகுபாபம்-ராமராமா 12. எள்ளுக்குள் எண்ணெய்போல் இருக்கிற நீசீதை இடத்தில் இருக்கலையோ பர்த்தாவே உள்ளக் கருத்தை வள்ளல் அறியும் என்ற வார்த்தை உனையல்லவோ சொல்லாய் கர்த்தாவே-ராமராமா 13. எதிரரக் கரைக்கொன்றாய் பதியில் எங்களை வைத்தாய் இந்தத் தயவுனக் கெங்கே போச்சோ மிதிலை வல்லியை இங்கே சோதித்தாய் எங்களை விருந்திட்டுப் பகைகாண மனதாச்சோ-ராமராமா 14. இழுக்காகிய பொன்னைப் புடத்தில்வைத் தெடுப்பார்கள் இவளுக் குண்டோ சொல்லாய் விதியாசம் அழுக்கில் லாத்தங்கத்தைப் புடத்தில் வைத்தெடுத்தாயே ஐயா உனக்கு முண்டோ மதிமோசம்-ராமராமா ------ மக்களையும் மருமகளையும் சக்கிரவர்த்தி புகழ்தல் விருத்தம்-106 ஆராத பிரமனிவ்வா றுரைக்கத் தேவர் அனுமதியாற் றசரதன்தேர் நிலமேற் கொண்டான் காராரும் குழற்சீதைக் குபசரித்தான் கற்பகமே வாழிஎன்றான் இளையோன் தன்னைச் சோராமல் அண்ணன்தாட் புண்ணும் இந்திரன் தோட்புண்ணும் துடைத்தனையே என்றான் கண்ட |