577 அனுமார் வசந்தனைக் கொண்டு வருதல் சந்த விருத்தம்-107 முடிபுனை யுந்தச ரதனுரை இங்கிது முழுதும் மொழிந்துடனே முதல்வர் வரந்தனில் அனைவர் களும்பழ முறையின் எழுந்தபினே இடர்பெரு கும்பர தனையரு ளும்படி வடதிசைப் புட்பகமேல் இரகுபதி யும்சன கியும்ஒரு தம்பியும் எவரும் நிறைந்திடுமுன்-மறு படியும்வசந் தனையொரு நிமிஷம்கொடு வருகென எம்பெருமான் வரைநிரு பந்தனை முடிமிசை கொண்டொரு மறலியின் மண்டலமும் அடுகளி றிந்திரன் உறைதரு மண்டலம் அயனுறை மண்டலமும் அதிரதி ரும்படி விசையனுமந் தனவ் வளவில் கிளம்பினனே. தரு-85 அசாவேரி ராகம் ஆதிதாளம் பல்லவி தாவிஅனுமன் வந்தானே-வசந்தனை ராம சாமிமுன் கொண்டோடிப் பாய்ந்தானே (தாவி) அநுபல்லவி காவல் வசந்தனைமுன் போலை காட்டென்று செங்கை ஓலை காகுத்தன் எழுதிட எமபுரத் திசைகண்டு வேகத்துடனே அரை நொடியின் விசைகொண்டு (தாவி) சரணங்கள் 1. துருவி எமலோகத்தை வாட்டி வசந்தனில்லாமல் சொல்லி அரிகரி என்றுபா ராட்டி காலில் விழுந்த நரகவாசரை அப்பால் ஓட்டி காட்டடா என்று நமனை வாலிற் சுருக்கி மாட்டி எங்கெங்கும் தேடி கெருடவேக மொடு கந்தர்வ லோகமும் இருகண்ணும் சிமிட்டா முன் இந்திர லோகமும் (தாவி) 2. ஐந்தாரு நீழல் எங்கும் தேடி பயந்துவந்த அந்தத் தேவரோடுரை யாடி சொர்க்கலோகத்தில் சந்தேகம் உண்டென்றதை நாடி அந்த லோகத்தில் சற்று நேரத்தில் போய்க் கூடி அதற்கப்புறம் பந்துபோல் எழும்பிப் பணைத்தவால் பெருக்கி அந்தக னுடனே இந்திரனையும் சுருக்கி (தாவி) |