பக்கம் எண் :

578

3. கவலையா பிரம்ம லோகம் நோக்கி     வசந்தனை இங்கே
     காட்டென்று பிரம்மாவுடன்தாக்கி    இந்திரன் ஏமனோ
  டவனையும் வாலிற்கட்டித் தூக்கி       சரசரென்று
     அந்த உலகைவிட்டுப் போக்கி      மிகவும் நல்ல
  தவமிகுந்த பெரும்                  சத்திய முனிவர் கிட்டும்
  விவர முத்திதரும்                   விஷ்ணு பதவிமட்டும் (தாவி)

-----

ஸ்ரீராமர் இலங்கையில் பலர்பட்ட இடங்களைக் காட்டுதல்

விருத்தம்-108

ஓகையுட னேஅனுமான் இவ் வாறுவசந்தனைத்தான்
                                    உடனே கொண்டான்
ஆகமது மிகக்களித்தார் வானரர்கள் மானிடர்கள்
                                    ஆனார் இப்பால்
வாகைபெறு தம்பியுந்தா னும்பழைய புஷ்பகமேல்
                                    மகிழ்ந்த ராமன்
தோகையெனும் சீதையுடன் சொல்லுவான் இவையிவைகள்
                                    சொல்லுவானே.

திபதை-15

சங்கராபரண ராகம்                        ஆதிதாளம்

கண்ணிகள்

1. கன்னிகையே அந்த சனகன் வேள்வியில் வந்த
     கற்புள்ள                      மடமானே
 உன்னிமித்தத்தில் இந்த தென்னிலங்கை போனதை
     உற்றுப்பார்                    நீதானே

2. வடிக்கணை ஒன்றாலேநான் ராவணன் உயிர்கொண்ட
     வடக்கு வாசலைப்              பாராய்
  கெடிபெறும் நீலனந்த பிரகஸ்தன் உயிர்பறித்த
     கிழக்கு வாசலைப்               பாராய்

3. தீரன் அங்கதன் அந்த வச்சிரத ந்தனைக் கொன்ற
     தெற்கு வாசலைப்               பாராய்