பக்கம் எண் :

579

  வீரன்உன் மைத்துனன் இந்திரசித்தனைக் கொன்ற
     மேற்கு வாசலைப்               பாராய்

4. உறுதிசொல் கும்பகர்ணன் அதிகாயன் முதலானோர்
     உருண்ட களத்தைப்             பாராய்
  பிறகு மூலபலங்கள் கால்மாடு தலைமாடாய்
     பிரண்ட களத்தைப்              பாராய்

5. அடுபோரில் நமைக் காத்த அனுமான் அகம்பனை அன்
     றடுகளத்தைப்                  பாராய்
  படுபாவி அம்மகோ தரன் என்தன் கையிற்பட்ட
     படுகளத்தைப்                  பாராய்

6. வடிவான பாண்டம் கொட்டித்தட்டிச் செய்யும் குச
     வனுக்குப் பலநாள்               வேலை
  தடிகாரனுக் கரை க்ஷணம்போல் அரக்கர் என்னால்
     சமைந்ததைப் பார்கண்           ணாலை

7. இந்திர சந்திர சூரியர் எட்டிப் பார்க்கக் கூடாத
     ஏழுமதில்கள்                   பாராய்
  அந்தமாம் பாதாள லோகத்தின் கீழும்போல்
     அகழிகை இவை                பாராய்

8. சுக்கிரீவன் தங்கிநின்று ராவணன்மேற்பாய்ந்த
     சுவேலை மலையைப்            பாராய்
  இக்கடல் சேனைபட்ட ரத்தக்கடலைக் கொண்ட
     இந்தக் கடலைப்                பாராய்

------

ஸ்ரீராமர் சீதைக்குச் சேதுவைக் காட்டி அதின் மகிமை கூறல்

விருத்தம்-107

நிறமென் கூந்தற் சானகியே நின்னை அனுமான் கண்டு வந்த
பிறகு கவிகள் ஒருநளனால் பெருக்கச் செயும்பே ரணைபாராய்
உறுதியாக இதன்மகிமை உரைக்கமுடியா தானாலும்
சிறிதுமொழிவேன் எனராமன் செல்வான் எடுத்துச் சொல்வானே.