பக்கம் எண் :

580

தரு-87

மோகனராகம்                             அடதாளசாப்பு

பல்லவி

இந்த சேதுவைக் கண்டாற் போமே-சனகன் பெண்ணே
இகபர சித்தி         ஆமே                        (இந்த)

அநுபல்லவி

சந்ததமும் மனத்திற் பிரியாதே-சகல
பத்தினிகளும் தொழவரும் மாதே                     (இந்த)

சரணங்கள்

1. தந்தை தாயுடனே குருதெய்வ நிந்தனையும்-கதிநீஎன்று
  தஞ்சம் அடைந்தவரைக் கெஞ்ச அடிக்கும் சற்பனையும்-அகதிகளை
  அந்தணரைப் பசுவை மைந்தரைக் கொல்லும் வேதனையும்-
                                              பஞ்சகாலத்தில்
     அன்னமிட்டவரைக் கன்னமிட்டிடும் வஞ்சனையும்-பயப்படாமல்

நிந்தையான கள்ளைக்           குடிப்பதும்-பசு
மந்தை உறிஞ்சுகல்லை           இடிப்பதும்-நடுச்
சந்தி விருட்சங்களை             ஒடிப்பதும்-பிறர்
சொந்தப் பெண்களைக் கை        பிடிப்பதும்

நொந்தபேர் பொருளைக் கொண்ட      தோஷமும்
     நோன்புகளை நடுவில் விண்ட     தோஷமும்
வந்தபேர் பசிக்க      உண்ட         தோஷமும்
     மடிநழுவும் பெண்களைக் கண்ட   தோஷமும் (இந்த)

2. கேடுசெய்பவ ரோடுறவாகிய நிலையும்-வயிற்றினிற்ப
     கீர்என்றிட வழக்கோரம் சொல்லிய கெடுதலையும்-பாதிசாமத்தில்
  வீடுகளில் மறைந்தோடி நெருப்பிடும் புலையும்-கண்ணிகள் குத்தி
     விலங்கும் பறவைகளும் கலங்கிடவே செய்யும் கொலையும்-
                                             ஆணும் பெண்ணும்

  கூடும் கூட்டுறவைப்      பிரிப்பதும்-வழி
  பாடுதம்பி நடக்கக்       குறிப்பதும்-நடுக்
  காடுகளிலே வெட்டிப்     பறிப்பதும்-விளை
  யாடும் பிள்ளைக் கழுத்தை முறிப்பதும்