581 நாடிக் கொடுப்பவரைத் தடுக்கும் பாவமும் நாணிழந்த பெண்ணுடன் படுக்கும் பாவமும் கோடைக்குளத்தைத் துத்து விடுக்கும் பாவமும் கோட்சொல்லிக் குடிகளைக் கெடுக்கும் பாவமும் (இந்த) 3. மாலையிட்டவனை இகழ்ந்து சொல்லும் பாதகமும்-வேறொருவனை மருவியதனில்வந்த கருவை யழிக்கும் தோதகமும்-பாலும்தேனும் போல இருப்பவரைக் கலைக்கும் மித்திர பேதகமும்-மாதவிடாய் பூத்த மங்கையரைச் சேர்த்தணைத்த சூதகமும்-தருவேன் என்று மேலவர்களை அலைக் கழிப்பதும்-வழிச் சாலைசத்திரங்களை அழிப்பதும்-செய்யும் கால செபதபத்தை ஒழிப்பதும்-இடும் பாலே கவீசரைப் பழிப்பதும் ஏலும் இறைச்சிகளைத் தின்ற தோஷமும் இருட்டினில் இடமில்லை என்ற தோஷமும் ஆலயங்களிற் புணர் கின்ற தோஷமும் ஆற்றில் அம்மணத்துடன் சென்ற தோஷமும் (இந்த) ------ ஸ்ரீராமர் சீதைக்கு வந்தவழி அடையாளம் கூறல் விருத்தம்-110 திருவணைப் பலன் ஈதென்று சிலையினாற்பகுத்த ராமன் தருமலர்க் குழலியான சானகி வதனம் நோக்கிப் பொருமதில் அயோத்தி விட்டுப் புறப்பட்ட நான்முன்தொட்டு வரும்வரி அடையா ளங்கள் வகுத்திட்டான் தொகுத்திட்டானே. தரு-88 ஆனந்தபைரவி ராகம் அடதாளசாப்பு பல்லவி சனகன்மாதே-பாராய்-சனகன்மாதே (சன) அநுபல்லவி நினைவினுடன்மனம் மகிழப்பாராய்ப் பெண்ணே (சன) |