| 582 சரணங்கள் 1. இலங்கைநகர் மேலே முந்நாள் எழுந்தனுமான் பாயவேஇடந்தரும் மயேந்திரம்இது        தானே
 தலம்புகழ வேஎன்னை வருணன் அடைக்கலம் என்று
 சரண்புகுந்த தானம் இது         தானே-பெண்ணே     (சன)
 
 2. மதிகதிர் உள்ளளவும்போம் பொதியமலை இது திவ்ய
 மகத்துவமுள்ள அகஸ்திய முனி    தானம்
 கெதியில் எதிரேநின்ற மலையிது சுக்கிரீவன்வாழ்
 கிஷ்கிந்தை அவனுக்கா           தீனம்-பெண்ணே      (சன)
 
 3. சந்திரனை நட்சத்திரம்போல் உன்தனை இணங்கவே
 சகி செனங்கள் ஆகஒருக்        காலே
 இந்தமலை நின்றும்வா னரமாதர் உருமாறி
 இதோ வருகின்றார்பார் கண்      ணாலே-பெண்ணே    (சன)
 
 4. கிளைக்கும்என் அம்பினாலே எழுமரங்களும் வீழ்ந்து
 கிடக்கிறதைப் பார்நமக்கு         நேராய்
 வளைக்கும் மழைக்காலத்தில் தம்பியுடன் நானிருந்த
 மாலிய வந்தமலை இதனைப்       பாராய்-பெண்ணே   (சன)
 
 5. துதிசெய்துன் பணிகளைச் சுக்கிரீவன் காட்ட நான்
 துயருற்ற மதங்கஅடி                 வாரம்
 அதிக பயபக்தியா என்னையும் உன்னையும் காத்த
 அனுமன் கண்டதிவிடம்பம்பை         ஓரம்-பெண்ணே  (சன)
 
 6. தயவாக மனந்தேற்றிப் பசியாற்றிஎனைப் போற்றி
 சபரி முத்திபெற்ற திந்த     சாலை
 உயிர்போலும் உனைத்தேடி வாடும் வழிமேற்க வந்தன்
 உயிர்கொண்ட மூலையிந்த   மூலை-பெண்ணே         (சன)
 
 7. எதிர்தரும் ராவணன் கையில் பழமை பாராட்டி உன்னால்
 இறந்த தந்தைக் கிங்கே சமஸ்     காரம்
 சதிர்செய்மூன்று வருஷமும் நாமிருக்கத் தம்பி செய்த
 சாலையிது பஞ்சவடி             தீரம்-பெண்ணே          (சன)
 
 8. இவிடம் மாரீசன்பட்ட திவிடம் சூர்பநகி கெட்ட
 திவிடம் கரதூஷணர் வி          நாசம்
 
 |