பக்கம் எண் :

583

  இவிடம் கோதாவிரி அன்னை இவிடம்தம்பி கண்டதென்னை
     இவிடம் உன்னைராவணன் செய் மோசம்-பெண்ணே     (சன)

9. தனித்துநீ புலம்பும்நாள் உன்னிமித்தம் உயிர்விடும்
     சடாயுவனம்இது அவன்என்      சாமி
  அநித்தியம் இல்லா அகஸ்தியமுனி எனக்குப் படைகொடுத்த இடம்
     அறிவையே ஈதல்லோ புண்ணிய  பூமி-பெண்ணே        (சன)

10. இது சுதிஷ்ட முனிவனது இதுதண்டகாரணியம்
     இதுவே முனிவர்கட்கு       வாசம்
  இது சரபங்கமுனி தேவியுடன் முத்திபெற்ற
     இடமிது அதிகப்பிர         காசம்-பெண்ணே           (சன)

11. இங்கே விராதனைக் கொல்ல தேவனாகி எனைப் போற்றி
     ஏகினான் அல்லவோ வானின்          மீதே
  தங்கப் பணிஉனக்குஅது சூசைதர எனை அத்திரி
     தயவோ டாதரித்த ஸ்தலம்             ஈதே-பெண்ணே  (சன)

12. கன்று பிரிந்தபசுப் போல்நான்பிரியப் பரதன்வந்து
     கண்டமலை இது சித்திரக்       கூடம்
  அன்றி ளையவன் தள்ள ஏறிவந்த யமுனைஇதுக்
     கடையாளம் பார் மூங்கிலாற் சய்  ஓடம்-பெண்ணே      (சன)

13. ஈரேழுவருஷமும் நம்மைவரு வழிநோக்கி
     இருக்கும் பரத்துவனுக் கிது       காணி
  காரெழு குகன் காக்கும் கங்கையிது நம்மைமுன்னாள்
     கரைஏற்றி விட்டதிந்த           தோணி-பெண்ணே    (சன)

14. சீலமுள்ள தந்தையார்க்கு எள்ளும்நீரும் நான்இறைதத
     தீர்த்தமிது கங்கைநதி           நேத்தி
  மூலமுதற் பொருளிருக்கும் ஆலிலையைப் போல் இதோ
     முன்காணும் நகரம்அ           யோத்தி-பெண்ணே    (சன)