584 ஸ்ரீராமர் வரவில்லையே என்று பரதர் புலம்பல் விருத்தம்-111 உரத்தாலே இந்தவிதம் உரைத்த ராமன் உடன் வரும்சேனையுந்தானும் பரத்து வாசன் வரச்சாலை யினிற்புகுந்தான் அயோத்தி தன்னில் மாருதியை அனுப்பஅவன் வரும்போ திங்கே தரத்தாலே எனக்குரைத்த நாளாச் சையோ சாமிவரு வானோவா ரானோ இன்னம் வரக்காணேன் என்ஆவி வைக்கேன்என்று வாடுவான் பரதன்நொந்து தேடு வானே. திபதை-17 பூபாள ராகம் அடதாளசாப்பு கண்ணிகள் 1. பதினாலு வருஷம் போய்ப் பரதாநான் வருகிறேன் பாரடா என்றாய் இந்தப் பூமி பதினாலு வருஷத்துக் குள்ளோ வருவது பதினாலு போயோ என் சாமி-ராமராமா 2. உண்டான ராமவாக் கொன்றோ ரண்டோ என்தன் ஊழ்வினைப் பயன்இது தானோ மண்டையிலே எழுதி மயிரால் மறைத்துவைத்த மலரயன் கபடறி வேனோ-ராமராமா 3. முக்கிய பாதுகையே எல்லாத் தெய்வமுமென்று முன்னாளிற் கட்டளையிட் டாயே தெற்குத் திசையே எல்லாத் திசையுமாம் என்றென்னைத் தினம் பார்த்துத் திகைக்கவிட் டாயே-ராமராமா 4. வருவான்என் சாமிஎன்னைப் பிரியாதே என்று நெஞ்சை மடக்க மடக்க மடங் காதே இருபாதம் என்று சொல்லும் கரைகண்டாலல்லாமல் என்கண்ணீர் வெள்ளம் அடங் காதே-ராமராமா 5. உருகிற தாய்மார்க்கும் ஊர்க்கும் எனக்குஞ் சொன்ன ஒருவனைக் காணேன் கண் மீதே |