607 அனமிசை வருகிற அயன்வரு கமலமும் வனிதை சனகிதிரு மலர்முக கமலமும் அன்பூறும் பச்செனும் சொ ரூபமும் முன்காணும் கைப்பிரசண்ட சாபமும் அங்கேகண் கொண்டுகண்ட பேரிதை இங்கே என்சொல் வோமென வேயதை அந்தர துந்துவி தும்தும் தும்மென முந்திய சங்குகள் பம்பம் பம்மென அந்தைகள் பம்பைகள் திம்திம் திம்மென மொந்தை அதிர்ந்தது தொம்தொம் தொம்மென ஆதாளி கொண்டுவிரி பாதாளமும் திசையும் ஆலோலம் மண்டுகடல் போலே முழங்கிவிட அந்த லோகமும் இந்தலோகமும் எந்தலோகமும் திரியும் அனைத்துயிர் களும் ஒக்க மலர்க்கை குவித்து நிற்க அதிஷ்டம் அயோத்தி தக்க அதிஷ்டமுனிவன் வைக்க (மகுட) ------ ஸ்ரீராமர் அரசியல் விருத்தம்-125 திருமுடிமேல் மகுடாபி ஷேகம் கொண்டு சீதையுடன் ரத்தினசிம்மா சனமேற்கொண்டு தருமநிலை வசிஷ்டமுனி உரைக்கக் கொண்டு தம்பியர்மன் னவர்வணங்கச் செங்கோல் கொண்டு வருமறையோர் தம்மாசீர் வாதங் கொண்டு மன்னுயிரைத் தன்னுயிர்போல் மனத்துட்கொண்டு கருமுகில்நேர் மேனிரகு ராமன் பூமி காத்திட்டான் ஒருகுடைக்கீழ்ச் சேர்த்திட்டானே தரு-101 அசாவேரிராகம் ஆதிதாளம் பல்லவி காட்சியுடனே ராமன் தாழ்ச்சியில்லாமல்-அர சாட்சிசெய் திருந்தானே (காட்) |