பக்கம் எண் :

608

அநுபல்லவி

மீட்சிசெய்த சீதாச          மேதனாகவே ஓங்கி
     வீறும் சிங்காசனமேல்  மேவிக்கருணை தேங்கி
மாட்சிபெறும் சடையன்      மரபோர் கொடுக்கவாங்கி
     மணிமகுடத்தை ஞான  வசிஷ்டர் தரிக்கத்தாங்கி         (காட்)

சரணங்கள்

1. ஏற்கும் பசுவும் அதைத்        தாக்கும் வேங்கையும் ஒன்றா
     இசைந்திருக்கவே           பகை      நீக்கி
  ஆர்க்கும் அடங்காததுன்       மார்க்கம் உடைய பொல்லா
     அடையலர் படைகளைப்     போக்கி
  சேர்க்கும் குடிகள் ஆறில்      ஒருகடமை கொடுத்துச்
     செழித்திடவே செல்வம்     தேக்கி
  பார்க்குள் உறுதுயரை          நீக்கி அருளவல்ல
     பரதனை இளவர           சாக்கி

  தார்ப்புயன் லட்சுமணன்        சேனாதிபதியாகி வீற
    சத்துருக்கன் ஞாயாதிபதி     ஆய்நீதி நிறை   வேற
  கார்க்கடல் வண்ணன்தேவர்     கண்டுகளிப்     பூற
     கலைவல்ல பலபல ரிஷிகள்  பல்லாண்டு      கூற (காட்)

2. மல்லார் புயச்சுக்கிரீவன் முதலாம்   வானரருக்கு
     மாமணிப் பணிகளும்          பாய்ந்து
  கல்லார்சஞ் சீவிமலை கொண்டுவந்த அனுமார்
     களிக்கப் பிரமபட்டமும்        ஈந்து
  சொல்லார் விபீஷணனுக் கரங்க விமானந்தந்து
     துதிகுகன் சாம்பு வந்தனுக்      காய்ந்து
  எல்லார் பலமணிகள் கோர்வை செய்திட்டகண்டி
     எழில்பெறக் கழுத்தினில்       வேய்ந்து

  சல்லாப மகாஅவர் தமையும் அனுப்பி விட்டு
     சாதிசனங்களுடனே எப்பொழுதும் நட்டு
  வல்லாளன் ஆய்க்கொடுங் கோல்மன்னவரை அட்டு
     வடிவழகிய மலர்க்கையாற் செங்கோலைத்தொட்டு (காட்)

3. நேசமிந்தபரந்      தாமத்திலிருக்கும் நித்
     திய சூரிசளும்பிர               காச