609   ராமராச்சியத்துக்கிணை       ஆமோஎந்த லோகமும்      நாமும் அங்கேபோவோமென்று பேச   சாம பேததான              தண்டம் அறிந்தராச      சமூகங்கள் எங்கும் வந்து    மூச   காமராசனும் அந்த           திவ்விய மங்கள விக்கிர      கத்தைக் கண்டுகண்கள்      கூச   நேமப்படியே மந்திரி         பிரதானிகளும் துய்ய      நெறியார் மனுவின்படி உரியஅரசு செய்ய   ஏமம்பெற மாதமும்           மாரிஎங்கெங்கும் பெய்ய      இகத்தினில் உள்ளசர் வசீவரத்து மாக்களும் உய்ய (காட்) சமாப்தியில் மங்களம் பாயிரத்தில் உள்ள மங்களத்தை அவ்விருத்தத்தோடு இங்கே                                               பாடிக்கொள்க சமாப்தியில் சோபனம் பாலகாண்டத்தில் உள்ள சோபனத்தைமட்டும் இங்கே பாடிக்கொள்க வாழி விருத்தம்-126     இரவிகுலம் வாழிசீ தாராமர் வாழி           இளையவர்மூ வரும்வாழி இவர்பெண்டிர் வாழி     குருவசிஷ்டர் சுமந்திரர் அனுமார் சுக்கிரீவர்வாழி           குருவாழி குகர்விபீ ஷணர்வாழி இந்தப்     பரவியபார் கார்வாழி மும்மூர்த்தி வாழி           பலஅமரர் முனிவர் மதிகதிர்கள் வாழி     தருவளர் காழிஅருணா சலகவி சொல்லியகீர்த்           தனைப்படிப் போர்கேட்போரும் வாழி வாழி!    |