பக்கம் எண் :

611

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

யுத்தகாண்டம்

(கம்பராமாயண ஒப்புமைப்பகுதி)

அனுமார் மீண்டபின் ராவணன் கேட்க மந்திரிகள் ஆலோசனை கூறல்

விருத்தம்-1 திபதை-1

பூவரும் அயனோடும் புகுந்து பொன்னகர்
மூவகை உலகினும் அழகு முற்றுற
ஏவின இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொளத் தெய்வத் தச்சனே

பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை
நன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்
முன்னையின் அழகுடைத்து என்றுமொய்கழல்
மன்னனும் உவந்துதன் முனிவு மாறினான்

தாழ்ச்சிஇங் கிதனின்மேல் தருவது என்இனி
மாட்சிஓர் குரங்கினால் மறுகி மாண்டதால்
ஆட்சியும் அரசும்என் அமைவும் நன்றுஎனா
சூழ்ச்சியின் இழவரை நோக்கிச் சொல்லுவான்

சுட்டது குரங்கெரி சூறை யாடிடக்
கெட்டது கொடிநகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
இட்டஇவ் அரியணை இருந்தது என்உடல்

என்றவன் இயம்பலும் எழுந்திறைஞ்சினான்
கன்றிய கருங்கழற் சேனை காவலன்
ஒன்றுளது உணர்த்துவது ஒருங்கு கேள்எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான்

வஞ்சனை மனிதரை இயற்றி வாள்நுதல்
பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல்
அஞ்சினர் தொழில்என அறிவித்தேன்அது
தஞ்சென உணர்ந்திலை உணரும் தன்மையோய்