பக்கம் எண் :

612

போயின குரங்கினைத் தொடர்ந்து போய்இவண்
ஏயினர் உயிர்குடித் தெவ்வம் தீர்கிலம்
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும்நம் வலியென உணரக் கூறினான்

மற்றவன் பின்னுறு மகோ தரப்பெயர்க்
கற்றடந் தோளினான் எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால்
கொற்றவ கேள்என இனைய கூறினான்

இடுக்கிவண் இயம்புவ தென்னை ஈண்டெனை
விடுக்குவை யாமெனின் குரங்கை வேரறுத்து
ஒடுக்கரும் மனிதரை உயிருண்டு உன்பகை
முடிக்குவென் யான்என முடியக் கூறினான்

இச்சிரத் தவன்உரைத் திறுக்கும் எல்லையில்
வச்சிரத் தெயிற்றவன் வல்லை கூறுவான்
அச்சிரத்தைக் கொருபொருளன்று என்றனன்
பச்சிரத் தம்பொழி பருதிக் கண்ணினான்

நில்நில் என்றவன்தனை விலக்கி நீயிவண்
என்முனும் எளியைபோல் இருந்தியோ எனா
மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால்
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான்

ஒல்வது நினையினும் உறுதி ஓரினும்
வெல்வது விரும்பினும் விளைவு வேண்டினும்
செல்வதங் கவருழைச் சென்று தீர்ந்தறக்
கொல்வது கருமம்என்று உணரக் கூறினான்

காவலன் கண்ணெதிர் அவனைக் கைகவித்து
யாவதுண் டினிநமக்கு என்னச் சொல்லினான்
கோவமும் வன்மையும் குரங்குக் கேயெனா
மாபெரும் பக்கன்என் றொருவன் வன்மையான்

மானுடர் ஏவுவார் குரங்குவந் திவ்வூர்
தானெரி மடுப்பது நிருதர் தானவர்
ஆனவர் அதுகுறித்து அழுங்குவார் எனின்
மேல்நிகழ் தக்கன விளம்ப வேண்டுமோ