பக்கம் எண் :

613

திசாதிசை போதும்நாம் அரசன் செய்வினை
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வென்றான்
பிசாசன்என் றொருபெயர் பெற்ற பெய்கழல்
நிசாசரன் உருப்புணர் நெருப்பின் நீர்மையான்

ஆரியன் தன்மையீ தாயின் ஆய்வுறு
காரியம் ஈதெனின் கண்ட வாற்றினான்
சீரியர் மனிதரே சிறியம் யாம்எனா
சூரியன் பகைஞன் என்றொருவன் சொல்லினான்

ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ்வினை இதனின்மேல் பகரத் தக்கதோ
சூழ்வினை மனிதரால் தோன்றிற் றாம்எனா
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான்

தொகைநிலைக் குரங்குடை மனிதர்ச் சொல்லிஎன்
சிகைநிறச் சூலிதன் திறத்தின் செல்லினும்
நகையுடைத் தாமமர் செய்தல் நன்றெனாப்
புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான்
 (இராவணன் மந்திரப்படலம் 1, 2, 11-13, 15, 16, 21, 22, 27, 28, 31, 37,
                                             38, 40, 42-45)

கும்பகர்ணன் ராவணனுக்கு ஆலோசனை கூறல்

விருத்தம்-2 தரு-1

வெம்பிகல் அரக்கரை விலக்கி வினைதேரா
நம்பியர் இருக்கஎன நாயகனை முன்னா
எம்பிஎன கிற்கில் உரை செய்வல் இதம்என்னா
கும்பகருணப் பெயரினானிவை குறித்தான்

நீஅயன் முதற்குலம் இதற்கொருவன் நின்றாய்
ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவமைந்தாய்
தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய்
ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ

ஓவியம் அமைந்தநகர் தீயுண உளைந்தாய்
கோஇயல் அழிந்ததென வேறொரு குலத்தான்