பக்கம் எண் :

614

தேவியை நயந்துசிறை வைத்தசெய்ல நன்றோ
பாவியர் உறும்பழி இதிற்பழியும் உண்டோ

நன்னகர் அழிந்ததென நாணினை நயத்தால்
உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல்
மன்னகை தரத்தா ஒருத்தன் மனையுற்றான்
பொன்னடி தொழத் தொழ மறுத்தல் புகழ்போலாம்

என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய்
வன்றொழிலி னாய்மறைதுறந்து சிறைவைத்தாய்
அன்றொழிவ தாயின் அரக்கர் புகழ்ஐய
புன்றொழி னாரிசை பொறுத்தல்புல மைத்தோ

ஆசில்பர தாரமவை அஞ்சிறை யடைப்போம்
மாசில் புகழ்காத லுறுவேம் வளமை கூரப்
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம்

சிட்டர்செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய்
மட்டவிழ் மலர்க்குழலினாளை இனி மன்னா
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர்வெல்லப்
பட்டிடுதுமேல் அதுவும் நன்று பழியன்றால்

மரம்படர் வனத்தொழுவனே சிலை வலத்தால்
கரன்படை படுத்தவனை வென்று களைகட்டான்
நிரம்பிடுவ தன்றதுவும் நின்றதினி நம்பால்
உரம்படுவ தேஇதனின் மேல்உறுதி உண்டோ

வென்றிடுவர் மானுடவரேனும் அவர்தம்மேல்
நின்றிடை விடாது நெறிசென்றுற நெருக்இத்
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர்உல கேழும் உடன் ஒன்றாம்

ஊறுபடை ஊறுவதன் முன்னம் ஒருநாளே
ஏறுகடல் ஏறிநரர் வானரரை எல்லாம்
வேறுபெய ராதவகை வேரொடும் அடங்க
நூற்றுவது வேகருமம் என்பது நுவன்றான்
                       (இராவணன் மந்திரப் படலம் 47-56)