615 விபீஷணர் இந்திரசித்தை விலக்கி ராவணனுக்கு புத்திகூறல் விருத்தம்-3 தரு-2 என்றவன் இயம்பியிடும் எல்லையினில் வல்லே சென்றுபடை யோடுசிறு மானுடர் சினப்போர் வென்று பெயர்வாய் அரசநீகொல் எனவீரம் நன்றுபெரி தென்றுமகன் நக்கிவை நவின்றான் நீரும்நிலனும் நெடியகாலும் நிமிர்வானும் பேருலகில் யாவுமொரு நாள்புடை பெயர்த்தே யாரும் ஒழியாமை நரர்வானரரை எல்லாம் வேரும் ஒழியாதவகை வென்றலது மீளேன் என்றடி இறைஞ்சினன் எழுந்துவிடை ஈமோ வன்திறலினாய் எனலும் வாளெயிறு வாயில் தின்றனன் முனிந்துநனி தீவினையை எல்லாம் வென்றவரின் நன்றுணரும் வீடணன் விளம்பும் பிள்ளைமை விளம்பினை பேதைநீஎன ஒள்ளிய புதல்வனை உரப்பி என்உரை எள்ளலை யாமெனின் இயல்பல் ஆற்றுவென் தெள்ளிய பொருளென அரசற் செப்பினான் கோநகர் முழுவதும் நினது கொற்றமும் சானகி எனும்பெயர் உலகின் தம்மனை ஆனவள் கற்பினால் வெந்த தல்லதோர் வானரம் கூட்டதென்று ணர்தல் மாட்சியோ மீனுடை நெடுங்கடல் இலங்கை வேந்தென்பான் தானுடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வதுஓர் மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி தேனுடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ தீயிடைக் குளித்த அத்தெய்வக் கற்பினாள் வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ நோயுனக்கு யான்என நுவன்றுளாள் அவள் ஆயவள் சீதைபண்டு அமுதின் தோன்றினாள் |