616 பொய்யுரைத் துலகினில் சினவினார் குலம் அறப்பொருது தன்மேல் நெய்யுரைத் துறையிலிட்டு அறம்வளர்த் தொருவனாய் நெறியில்நின்றான் மையுரைத் துலவுகண் மனைவிபால் வரம்அளித்து அவைமறாதே மெய்யுரைத் துயிர்கொடுத்து அமரரும் பெறுகலா வீடுபேற்றான் அனையவன் சிறுவர் எம்பெரும உன்பகைஞரால் அவரை அம்மா இனையர் என்றுணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிரிலாதார் முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும் நினைவருந் தகையர் நம்வினையினால் மனிதராய் எளிது நின்றார் உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியதுமார்பு உலகை மூடும் மரம் ஒருங்கிய காரதியர் விராதனது மால்வரைகள் மானும் சிரம் ஒருங்கிய இனிச்செரு ஒருங்கியதெனின் தேவர்என்பார் பரம் ஒருங்குவதலால் பிறிதொருங் காததோர் பகையுமுண்டோ இந்தமாநகரைச் செருமுருக்கிய கான்கதிரிசிரத் தோன் முந்தமானாயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் அந்தமான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும் ஐயா இந்த மானிடவராம் இருவரோ டெண்ணலாம் ஒருவர் யாரே? இன்னம் ஒன்றுரைசெய்வேன் இனிதுகேள் எம்பிரான் இருவராய அன்னவர் தம்மொடும் வானரத்தலைவராய் அணுகி நின்றார் மன்னனும் நம்பகைஞராம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் கன்மம் அன்றிது நமக்கு றுதிஎன்றுணர்தலும் கருமம் அன்றால் இசையும் செல்வமும் உயர்குலத்தியற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது அசைவில் கற்பினவ் அணங்கை விட்டருளுதி அதன்மேல் விசையம் இல்லெனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான் (இராவணன் மந்திரப்படலம் 58, 64, 65, 72, 75, 77, 81, 84, 85, 90, 97, 98, 99) விபீஷணரை ராவணன் சீறிக்கூறல் விருத்தம்-4 தரு-3 இச்சைஅல்லன உறுதிகள் உரைக்குவென் என்றாய் பிச்சர் சொல்லுவ சொல்லினை என்பெரு விறலைக் கொச்சைமா னுடர்வெல்குவர் என்றனை குறித்தது அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா |