617 ஈங்கு மானுடப் புழுக்களுக்கு இலைவரம் என்றாய் தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் தாங்கும் யானையைத் தள்ளி அத்தழல் நிறத்தவனை ஓங்கல் ஒன்றொடும் எடுக்க முன்வரங் கொண்டதுண்டோ சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பலமுறை தோற்று வெல்லும் ஆற்றலும் ஒருமுறை பெறுகதாம் விண்ணைக் கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோளே? அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம்அறியேன் இரங்கி யான்நிற்ப என்வலி அவன்வயின் எய்த வரங்கொள் வாலியால் தோற்றனென் மற்றும் வேறுள்ள குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி நீலகண்டனும் நேமியும் நேர்நின்று பொரினும் ஏலும் அன்னவருடை வலிஅவன் வயின்எய்தும் சாலஅன்னது நினைந்து அவன்எதிர்செலல் தவிர்ந்து வாலிதன்னை அம்மனிதனும் மறைந்து நின்றெய்தான் ஊனவில் இறுதது ஓட்டைமா மரத்துள் அம்புஓட்டி கூனிசூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி யான் இழைத்திட இல்லிழந்து உயிர்சுமந்திருந்த மானுடன் வலி நீயலாது யார் உளர் மதித்தார் இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள் இடையோர் தந்தி கோடிறத் தகர்த்தநாள் தன்னையான் முன்னம் வந்தபோர் தொறும் துரந்தநாள் வானவர் உலகைச் சிந்தவென்றநாள் சிறியன்கொல் நீசொன்ன தேவன்! (இராவணன் மந்திரப்படலம் 101, 102, 104, 107, 108, 1-9, 113) இரணியன் என்பவன் எம்மனோரினும் முரணியன் அவன்தலை முருக்கி முற்றினான் அரணியன் என்றவற்கு அன்புபூண்டவனை மரணம்என் றொரு பொருள் மாற்றும் வன்மையோய் ஆயவன் வளர்த்ததன் தாதை யாக்கையை மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் ஏயும்நம் பகைஞனுக் கினிய நண்புசெய் நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ |