பக்கம் எண் :

618

பாழிசால் இரணியன் புதல்வன் பண்பென
சூழ்வினை முற்றியான் அவர்க்குத் தோற்றபின்
ஏழைநீ என்பெரும் செல்வம் எய்திப்பின்
வாழவோ கருத்தது வரவற்றாகுமோ

பழியினை உணர்ந்தியான் படுக்கிலேன் உனை
ஒழிகிலை புகலுதல் ஒல்லை நீங்குதி
விழிஎதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்
                   (வீடணன் அடைக்கலப் படலம் 2, 3, 4, 8)

சரணம் அடைந்த விபீஷணரைக் குறித்து

ஸ்ரீராமருக்கு அனுமார் கூறுதல்

விருத்தம்-5 - தரு-4

வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக
ஊழிகாண் குறுநினது உயிரை ஓர்கிலாய்
கீழ்மை யோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ
வாழ்மைதான் அறம்பிழைத்தவர்க்கு வாய்க்குமோ

எத்துணை வகையினும் உறுதிஎய்தின
ஒத்தன உணர்த்தினேன் உணர கிற்றிலை
அத்தஎன் பிழைபொறுத் தருளுவாய் என
உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்

தூயவர் துணிதிறன் நன்று தூயதே
ஆயினும் ஒருபொருள் உரைப்பென் ஆழியாய்
தீயன்என் றிவனையான் அயிர்த்தல் செய்கிலேன்
மேயின சிலபொருள் விளம்பக் கேட்டியால்

வாலிவிண்பெற அரசு இளையவன்பெற
கோலிய வரிசிலை வலியும் கொற்றமும்
சீலமும் உணர்ந்துநிற் சேர்ந்து தெள்ளிதின்
மேலரசு எய்துவான் விரும்பி மேயினான்

கொல்லுமின் இவனைஎன் றரக்கன் கூறிய
எல்லையில், தூதரை எறிதல் என்பது
புல்லிது பழியொடும் புணரும், போர்த்தொழில்
வெல்லலாம் பின்னர் என்று இடைவிலக்கினான்