பக்கம் எண் :

619

மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்தன் றாம்என
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்

அன்னவன் தனிமகள் அலரின் மேலயன்
சொன்னதோர் சாபமுண்டு உன்னைத் துன்மதி,
நன்னுதல் தீண்டுமேல் நணுகும் கூற்றுஎன
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதேவர்
மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டுநின்றாய்
ஆவத்தின் வந்தபயம் என்றானை அயிர்த்த கல விடுதியாயின்
கூவத்தின் சிறுபுனலை கடலயிர்த்தது ஒவ்வாதோ கொற்றவேந்தே

ஆதலால் இவன்வரவு நல்வரவே என்றுணர்ந்தேன் அடியேன் உன்றன்
வேதநூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பறியேன் என்று விட்டான்
காதல்நான் முகனாலும் கணிப் பரிய கலையனைத்தும் கதிரோன்முன்சென்று
ஓதினான் ஓதநீர்கடந்து பகைகடிந்து உலகை உய்யச் செய்தான்
  (வீடணன் அடைக்கலப் படலம் 10, 12, 86, 89, 94, 95, 98, 100, 102)
 

விபீஷணர் சரணாகதத்தைக் குறித்து ஸ்ரீராமர் கூறல்

விருத்தம்-6 தரு-5

மற்றினி உரைப்ப தென்னோ மாருதி வடித்துச் சொன்ன
பெற்றியே பெற்றி அன்ன தன்றெனின் பிறிதொன்றானும்
வெற்றியே பெறுக தோற்க வீகவீயாது வாழ்க
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை

பிறந்தநாள் தொடங்கியாரும் துலைபுக்க பெரியோன் பெற்றி
மறந்தநாள் உண்டோ என்னைச் சரண்என வாழ்கின்றானை
துறந்தநாள் இறந்தநாளாம் துன்னினான் சூழ்ச்சியாலே
இறந்தநா ளன்றோ என்றும் இருந்தநாள் ஆவ தென்றான்

போதகம் ஒன்றுகன்றி இடங்கர்மாப் பொருத போரின்
ஆதியம் பரமேயான்உன் அபயம் என்றழைத்த அந்நாள்
வேதமும் முடிவு காணாமெய்ப் பொருள் வெளிவந்தெய்தி
மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார்