பக்கம் எண் :

620

ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபயதானம்
ஈதலே கடப்பா டென்பது இயம்பினீர் என்பால்வைத்த
காதலான் இனிவேறெண்ணக் கடவதென் கரோன்மைந்த
கோதிலா தவனைநீயே என்வயின் கொணர்தி என்றான்
                   (வீடணன் அடைக்கலப்படலம் 105, 107, 110, 117)

சுக்கிரீவன் அழைத்தபோது விபீஷணர் சொல்லிக் கொண்டுவருதல்

விருத்தம்-7 தரு-6

தழுவினர் நின்றகாலைத் தாமரைக் கண்ணன் தங்கள்
முழுமுதற் குலத்திற்கேற்ற முறைமையால் உவகைமூள
வழுவலில் அபயம் நின்பால் வழங்கினன் அவன் பொற்பாதம்
தொழுதியால் ளிரைவின் என்று கதிரவன்சிறுவன் சொன்னான்

சிங்கஏறனையான் சொன்ன வாசகம் செவிபுகாமுன்
கங்குலின் நிறத்தினான்தன் கண்மழைத் தாரைகான்ற
அங்கமும் மனமதென்னக் குளிர்ந்ததவ் அகத்தை மிக்குப்
பொங்கிய உவகைஎன்னப் பொடித்தன உரோமப்புள்ளி

பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்தபாவி
வஞ்சனுக் கிளையஎன்னை வருக என்றருள் செய்தானோ
தஞ்செனக் கருதினானோ தாழ்சடைக் கடவுள்உண்ட
நஞ்செனச் சிறந்தேனன்றோ நாயகன் அருளின் நாயேன்

துறவியின் உறவுபூண்ட தூயவர் துணைவன் என்னை
உறஉவந்தருளி மீளா அடைக்கலம் உதவினானே
அறவினை இறையும் இல்லா அறிவிலா அரக்கன்என்னும்
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினிற் பிழைப்பதானேன்
                      (வீடணன் அடைக்கலப்படலம் 121-123, 126)

விபீஷணர் ஸ்ரீராமருடைய தெரிசனம் செய்தல்

விருத்தம்-8 தரு-7

மார்க்கடம் சூழ்ந்தவைப்பின் இளையவன் மருங்குகாப்ப
நாற்கடல் உடுத்தபாரின் நாயகன் புதல்வன் நாமப்
பாற்கடல் சுற்றவிற்கை வடவரைபாங்கு நிற்பக்
கார்க்கடல் கமலம் பூத்ததெனப் பொலிவானைக் கண்டான்