622 ஸ்ரீராமர் விபீஷனருக்கு அபயமும் அரசும்கொடுத்தல் விருத்தம்-10 தரு-9 ஆழியான் அவனைநோக்கி அருள்சுரந் துவகை கூர்ந்தே ஏழினோ டேழாய் நின்றஉலகும் என்பெயரும் எந்நாள் வாழும்நாள் அன்றுகாறும் வாளெயிற்றரக்கர் வைகும் தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேஎன்றான் உய்ஞ்சனென் அடியேன் என்று ஊழ்முறை வணங்கிநின்ற அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கித் தஞ்சநல் துணைவனான தவறிலாப் புகழான் தன்னைத் துஞ்சலில் நயனத்தைய சூட்டுதிமகுடம் என்றான் விளைவினை அறியும் மேன்மைவீடணன் என்றும்வீயா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின்ஐய களவியல் அரக்கன்பின்னே தோன்றிய கடமைதீர இளையவற் களித்தமோலி என்னையும் கவித்திஎன்றான் குகனொடும் ஐவரானேம் முன்புபின் குன்றுசூழ்வான் மகனொடும் அறுவரானேம் எம்முழை அன்பின்வந்த அகனமர் காதல்ஐய நின்னொடும் எழுவரானேம் புகலருங் கானந்தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை (வீடணன் அடைக்கலப்படலம் 139, 141-143) விபீஷணர் ஸ்ரீராமருக்கு ராவணன் பெருமைகூறல் விருத்தம்-11 தரு-10 ஆர்கலி இலங்கையின் அரணும் அவ்வழி வார்கெழு கனைகழல் அரக்கர் வன்மையும் தார்கெழு தானையின் அளவும் தன்மையும் நீர்கெழு தன்மையாய் நிகழ்ந்து வாய்என்றான் நிலையுடை வடவரைகுலைய நேர்ந்து அதன் தலைஎன விளங்கிய தமனியப் பெரு மலையினை மும்முடி வாங்கி ஓங்குநீர் அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே |