626 குரண்டம் ஆடுநீர் அளகையின் ஒளித்துறை குபேரன் திரண்ட மாடும் தன்திருவொடு நிதியமும் இழந்து புரண்டுமான் திரள்புலி கண்டதாம் எனப்போனான் இரண்டு மானமும் இலங்கைமா நகரமும் இழந்து என்றுலப்புறச் சொல்லுகேன் இராவணன் என்னும் குன்றுலப்பினும் உலப்பிலாத் தோளினான் கொற்றம் இன்றுலப்பினும் நாளையே உலப்பினும் சிலநாள் சென்றுலப்பினும் நினக்கன்றிப் பிறர்க் கென்றும் தீரான் (ஒன்னார் வலியறிபடலம் 15, 17-20, 26, 30, 33-45, 48-53, 56, 59) ஸ்ரீராமர்முன் விபீஷணர் அனுமாரைத் துதித்தல் விருத்தம்-12 தரு-11 ஈடுபட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால் பாடுபட்டவர் படுகடல் மணலினும் பலரால் சூடுபட்டது தொல்நகர் அடுபுலி துரந்த ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் எம்குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர் கிங்கரப் பெயர் கிரியன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் வெங்கரத்தினும் காலினும் வாலினும் வீக்கச் சங்கரற்கழி முப்புரத்தவர் எனச் சமைந்தார் வெம்புமாக்கடற் சேனைகொண்டு எதிர்பொர வெகுண்டான் அம்பும் ஆயிரத்தாயிரம் இவன் புயத்தழுத்தி உம்பர் வானகத்து ஒருதனி நமனைச் சென்றுற்றான் சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு; தலைவ சேனைக்காவலர் ஓர்ஐவர் உளர் பண்டுதேவர் வானைக்காவலும் மானமும் மாற்றிய மறவர் தானைக் கார்க்கருங் கடலொடும் தமரொடும் தாமும் யானைக் கால்பட்ட செல்லென ஒல்லையின் அவிந்தார் காய்த்த அக்கணத்து அரக்கர்தம் உடல்உகு கறைத்தோல் நீத்த எக்கரின் நிறைந்துள கருங்கடல் நெருப்பின் வாய்த்த அக்கனை வரிசிலை மலையொடும் வாங்கித் தேய்த்த அக்குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் |