பக்கம் எண் :

627

சொன்ன மாமதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச்
சின்னம் ஆனவர்கணக்கிலர் யாவரே தெரிப்பார்
இன்னர் ஆர்உளர் வீரர் மற்றிவன் சுடஎரித்த
அன்ன மாநகர் அவிந்தது அக்குருதியால் அன்று

விலங்கல் வெந்தவா வேறினி விளம்புவ தெவனோ
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்த
கலங்க ளோடும் அச்சாத்திய துசிலொடும் கதிர்வாள்
இலங்கை வேந்தனும் ஏழுநாள் விசும்பிடையிருந்தான்

காந்தும் வாளியின் கான்முதல் வீரரும் கவியின்
வேந்தும் அன்றிவர் விளிந்தவா கேட்டன்றிவ் விலங்கை
தீந்தவாகண்டும் அரக்கரைச் செருவிடை முருக்கிப்
போந்தவா கண்டும் நான்இங்குப் புகுந்தது புகழோய்
                         (ஒன்னார் வலியறிபடலம் 60-66, 68)

ஸ்ரீராமர் வருணன்பேரில் அம்புதொடுத்தல்

விருத்தம்-13 தரு-12

தருணமங்கையை மீட்பதோர் நெறிதருக என்னும்
பொருள் நயந்து நன்னூல் நெறிஅடுக்கிய புல்லில்
கருணையங் கடல்கிடந்தது கருங்கடல் நோக்கி
வருணமந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி

பூழிசென்று தன்திருவுருப் பொருந்தவும் பொறைதீர்
வாழிவெங்கதிர் மணிமுகம் வருடவும் வளர்ந்தான்
ஊழிசென்றன ஒப்பன ஒருபல் அவைஓர்
ஏழுசென்றன வந்திலன் எறிகட்கு இறைவன்

ஊற்றம் மீக்கொண்ட வேலையான் உண்டுஇல்லை என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம்எனும் மனத்தால்
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரிமுளைத்தென்னச்
சீற்றம் மீக்கொண்டு சிவந்தன தாமரைச் செங்கண்

வாங்கி வெஞ்சிலை வாளிபெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள்வலம் வீக்கினன் கோதையை விரலால்