பக்கம் எண் :

628

தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்

பெரிய மால்வரை ஏழினும்பெரு வலிபெற்ற
வரிகொள் வெஞ்சிலைவளர் பிறையாம் எனவணங்கித்
திரிவன நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மும்முடி கொடியன சுடுசரம் எய்தான்

மீனும் நாகமும் விண்தொடும் மலைகளும் விறகா
ஏனைநிற்பன யாவையும் மேல்எரி எய்த
பேனநீர் நெடுநெய்யெனப் பெய்கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம்ஒத்தது கடற்குட்டம்

பாழி வல்நெடும் கொடுஞ்சிலை வழங்கியபகழி
ஏழுவேலையும் எரியொடு புகைமடுத்து ஏகி
ஊழி வெங்கனல் கொழுந்துகள் உருத்தெழுந்தோடி
ஆழிமால் வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த

மருமதாரையின் ஏரியுண்ட மகரங்கள் மயங்கிச்
செருமவானிடைக் கற்பக மரங்களும் தீய
நிருமியா விட்டநெடுங் கணைபாய்தலின் நெருப்போடு
உருமு வீழ்ந்தெனச் சென்றன கடல்துளி உம்பர்

கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தெனக் கொளுந்த
ஓடும்மேகங்கள் பொரிந்திடை உதிர்ந்தன உம்பர்
ஆடும் மங்கையர் கருங்குழல் விளர்த்தன அளக்கர்க்
கோடு தீந்தெழக் கொழும் புகைப்பிழம்பு மீக்கொள்ள

நிமிர்ந்த செஞ்சரம் நிறந்தொறும் படுதலும் நெய்த்தோர்
உமிழ்ந் துலந்தன மகரங்கள் உலப்பில உருவத்
துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன தொடர்ந்து
திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி

சிந்திஓடிய குருதி வெங்கனலொடு செறிய
அந்தி வானகம் கடுத்தது அவ்அளப்பரும் அளக்கர்
பந்தி பந்திகளாய் நெடும் கடுங்கணை படர
வெந்து தீர்ந்தன பொரிந்தன சிலமீன்கள்