பக்கம் எண் :

629

அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்றடர்ந்து எரிஉய்ப்ப
வெதிரின் வல்நெடும் கான்என வெந்தனமீனம்
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல்திரைகளும் பொருவன ஒருபால்

தெய்வ நாயகன் தெரிகணை திசைமுகத் தொருவன்
வைவுஇது ஆம்என பிழைப்பில மனத்தினும் கடுக
வெய்யவல் நெருப்பிடை இடைபொறித் தெழவெறிநீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்ததுபுணரி

செப்பின் மேலவர் சீறினும் அதுசிறப்பாதல்
தப்புமேஅது கண்டனம் உவரியில் தணியா
உப்புவேலை என்றுலகுறு பெரும்பழி நீங்கி
அப்புவேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர்

ஆழியின் புனலற மணிகள் அட்டிய
பேழையிற் பொலிந்தன பரவை பேர்வறப்
பூழையின் பொருகணை உருவப்புக்கன
மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை

இடுக்கின எண்ணுவதில்லை ஈண்டினி
முடுக்குவென வருணனை என்ன மூண்டெதிர்
தடுக்கரும் வெகுளியான் சதுமுகன்படை
தொடுத்தனன் அமரரும் துணுக்கம் எய்தினார்

அண்ட மூலத்துக்கப்பால் ஆழியும் கொதித்தது ஏழு
தெண்திரைக் கடலின் செய்கை செப்பிஎன் தேவன்சென்னி
பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும்குளுகுளு கொதித்ததன்றே
  (கடல்சீறியபடலம் 2, 3,4, 13, 15-20, 23, 27, 29, 30, 49, 56, 58)

ஸ்ரீராமரை வருணன் சரணடைதல்

விருத்தம்-14 தரு-13

வந்தனன் என்பமன்னோ மறிகடற் கிறைவன் வாயில்
சிந்திய மொழியன் தீந்தசென்னியன் திகைத் நெஞ்சன்