65 இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனியிந்த உலகுக் கெல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன் (அகலிகைப் படலம் 18-23) ஸ்ரீ ராமர் சீதையைக் கண்டு ஐயுறல் விருத்தம்-13 - தரு-12 கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள் சொல்லும் தன்மைத் தன்றது குன்றும் சுவரும்திண் கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கனிநின்றாள் வெங்களி விழிக்கொரு விழவும் ஆயவர் கண்களின் காணவே களிப்பு நல்கலால் மங்கையர்க்கு இனியதோர் மருந்தும் ஆயவள் எங்கள்நா யகற்குஇனி யாவ தாங்கொலோ இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே மழைபொரு கண்ணினை மடந்தை மாரொடும் பழகிய எனினுமிப் பாவை தோன்றலால் அழகெனும் அணியும்ஓர் அழகு பெற்றதே எண்ணரு நலத்தினாள் இணைய நின்றுழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல்இணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் |