பக்கம் எண் :

66

வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்

மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டுடற்கு உயிர்ஒன் றாயினார்
கருங்கடற் பள்ளியில் கலவி நீங்கிப்போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ
                                 (மிதிலைக்காட்சிப் படலம் 32-38)

கௌசிகர் ஸ்ரீ ராமர் வரலாறு சொல்லுதல்

விருத்தம் - 14 - தரு-13

அயன்புதல்வன் தயரதனை அறியாதார் இல்லைஅவன்
பயந்தகுலக் குமரரிவர் தமக்குள்ள பரிசெல்லாம்
நயந்துரைத்துக் கரையேறல் நான்முகற்கும் அரிதாம், பல்
இயந்துவைத்த கடைத்தலையாய் யானறிந்த படிகேளாய்

துனியின்றி உயிர்களிப்பச் சுடராழிப் படைவெய்யோன்
பனிவென்ற படியென்ன பகைவென்று படிகாப்போன்
தனுவின்றித் துணையில்லான் தருமத்தின் கவசத்தான்
மனுவென்ற நீதியான் மகவின்றி வருந்துவான்
                                     (வரலாற்றுப்படலம் 15-16)

காதலரைத் தரும்வேள்விக்கு உரியவெலாம் கடிதமைப்ப
மாதவரிற் பெரியோனும் மாமகத்தை முற்றுவித்தான்
சோதிமணிப் பொற்கலத்துச் சுதையனைய வெண்சோறுஓர்
பூதகணத் தரசேந்தி அனல்நின்றும் போந்ததால்

பொன்னின் மணிப்பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதைப்
பன்னுமறைப் பொருளணர்ந்த பெரியோன்றன் பணியினால்
தன்னனைய நிறைகுணத்துத் தசரதனும் வரன்முறையால்
நன்னுதலார் மூவருக்கும் நாலுகூறுஇட்டு அளித்தான்

விரிந்திடுதீ வினைசெய்த வெவ்வியதீ வினையாலும்
அருங்கடையில் மறையறைந்த அறஞ்செய்த தவத்தாலும்
இருங்கடகக் கரதலத்துஇவ் எழுதரிய திருமேனிக்
கருங்கடலைச், செங்கனிவாய்க் கவுசலை என் பாள்பயந்தாள்