67 தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளமெனும் தகையானை, பரதன் எனும் பெயரானை எள்ளரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள்பயந்தாள் அருவலிய திறலினராய் அறங்கெடுக்கும் விறலரக்கர் வெருவருதின் திறலார்கள் வில்லேந்தி வரும்மேருப் பருவரையும் நெடுவெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள் இருவரையும் இவ்விருவர்க்கு இளையாளும் ஈன்றெடுத்தாள் (வரலாற்றுப்படலம் 20-24) ஈங்கிவரால் என்வேள்விக்கு இடையூறு கடிதியற்றும் தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையனாய்ப் பூங்கழலார்க் கொண்டுபோய் வனம்புக்கேன் புகாமுன்னம் தாங்கரிய பேராற்றல் தாடகையே தலைப்பட்டாள் அலைஉருவக் கடல்உருவத்து ஆண்தகைதன் நீண்டுயர்ந்த நிலைஉருவப் புயலியை நீஉருவ நோக்கையா உலைஉருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி மலைஉருவி மரம்உருவி மண்உருவிற்று ஒருவாளி (வராாற்றுப்படலம் 27. 28) கோதமன்றன் பன்னிக்கு முன்னையுருக் கொடுத்ததிவன் போதுவென்ற தெனப்பொலிந்த பொலங்கழற்காற் பொடிகண்டாய் காதல்என்றன் உயிர்மேலும் இக்கரியோன் பால்கண்டால் ஈதிவன்றன் வரலாறும் புயவலியும் எனவுரைத்தான் (ஆற்றுப்படலம் 31) நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அருந்தவனும் புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான் வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன் நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான் (கார்முகப் படலம் 25) ஸ்ரீ ராமர் வில் வளைத்தல் விருத்தம்-15 - தரு-14 உறுவலி யானையை ஒத்த மேனியர் செறிமயிர்க் கல்எனத் திரண்ட தோளினர் |