பக்கம் எண் :

68

அறுபதி னாயிரர் அளவில் ஆற்றலர்
தறிமடுத் திடையிடைத் தண்டில் தாங்கினார்

நெடுநில மகள்முதுகு ஆற்ற நின்றுயர்
தடநிமிர் வடவரை தானும் நாண்உற
இடமிலை உலகென வந்தது எங்கணும்
கடல்புரை திருநகர் இரைத்துக் காணவே
                                      (கார்முகப் படலம் 3,4)

தோகையர் இன்னன சொல்லிட நல்லோர்
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால்விடையும், பொன்
நாகமும் நாகமும் நாண நடந்தான்

ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதையெ னும்பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலையிது என்ன எடுத்தான்

தடுத்திமை யாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்
                                      (கார்முகப் படலம் 32-34)

பூமழை சொரிந்தார் விண்ணோர் பொன்மழை பொழிந்த மேகம்
பாமமா கடல்கள் எல்லாம் பன்மணி தூவி ஆர்த்த
கோமுனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற
நாமவேல் சனகற்கு இன்று நல்வினை பயந்த தென்னா
                                        (கார்முகப் படலம் 36)

தயரதன் புதல்வர் என்பார் தாமரைக் கண்ணன் என்பார்
புயலிவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார்
மயல்உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார்
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்

நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினைக் காணுந் தோறும் குரிசிற்கும் அன்ன தேயாம்