69 தம்பியைக் காண்மின் என்பார் தவமுடைத்து உலகம் என்பார் இம்பர்இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் (கார்முகப் படலம் 42, 43) மிதிலைக்குச் சக்கரவர்த்தியின் எழுச்சி விருத்தம் - 16 தரு-15 கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை ஈறில்வண் புகழினாய் இது அது என்றனர் வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் மாறதிர் கழலினான் வாசி என்றனன் (எழுச்சிப் படலம் 3) என்றுரைத்து எதிர்எதிர் இடைவி டாதுநேர் துன்றிய கனைகழல் தூதர் கொள்கஎனா பொன்திணி கலங்களும் தூசும் போக்கினான் குன்றென உயரிய குவவுத் தோளினான் (எழுச்சிப் படலம் 5) விடைபொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் இடையிலை உலகினில் என்ன ஈண்டிய கடையுக முடிவினில் எவையும் கால்படப் புடைபெயர் கடலென எழுந்து போயதே (எழுச்சிப் படலம் 9) உழுந்திட இடமிலை உலகம் எங்கணும் அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம் பாயினான் எழுந்திலன் எழுந்துஇடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடிமதில் மிதிலை கூடிற்றே (எழுச்சிப் படலம் 23) பொய்கையும் கமலக் கானில் பொலிவதோர் அன்னம் என்ன கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி ஐயிரு நூறு சூழ ஆய்மணிச் சிவிகை தன்மேல் தெய்வமங் கையரும் நாணத் தேன்திசை முரலப் போனாள் |