பக்கம் எண் :

70

விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரிமலர்த் தடங்கண் நல்லார் ஆயிரத் திரட்டி சூழ
குருமணிச் சிவிகை தன்மேல் கொண்டலின் மின்இது என்ன
இருவரைப் பயந்த நங்கை யாழிசை முரலப் போனாள்

வெள்ளெயிற் றிலவச் செவ்வாய் முகத்தைவெண் மதியம் என்று
கொள்ளையின் திரள் வான்மீன்கள் குழுமிய அனைய ஊர்தி
தெள்ளரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத்தேன்சிந்த
வள்ளலைப் பயந்த நங்கை வானவர் வணங்கப் போனாள்
                                       (எழுச்சிப்படலம் 63-65)

பொற்றொடி மகளிர் ஊரும் பொலன்கொள்தார்ப் புரவி வெள்ளம்
சுற்றுறு கமலம் பூத்த தொடுகடல் திரையின் செல்ல
கொற்றவேல் மன்னர் செங்கைப் பங்கயக் குழாங்கள் கூம்ப
மற்றொரு கதிரோன் என்ன மணிநெடுந் தேரிற் போனான்
                                         (எழுச்சிப்படலம் 75)

ஸ்ரீராமர் பவனிவருதல்

விருத்தம்-17-திபதை-1

மானினம் வருவ போன்றும் மயிலினம் திரிவ போன்றும்
மீனினம் மிளிர வானில் மின்னினம் மிடைவ போன்றும்
தேனினம் சிலம்பி ஆர்ப்பச் சிலம்பினம் புலம்பி ஏங்கப்
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்

விரிந்துவீழ் கூந்தல் பாரார் மேகலை அற்றம்நோக்கார்
சுரிந்தபூந் துகில்கள் தாங்கார் இடைதடுமாறத் தாழார்
நெருங்கினர் நெருங்கிப் புக்கு நீங்குமின் நீங்குமின் என்று
அருங்கலம் அனைய மாதர் தேன்நுகர் அளியின் மொய்த்தார்
                                          (உலாவியற்படலம் 1,2)

வீதிவாய்ச் செல்கின் றான்போல் விழித்திமையாது நின்ற
மாதரார் கண்க ளூடே வாவும்மான் தேரிற் செல்வான்