71 யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்குல் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே உறுபொருள் உணர்த்தி விட்டான் (உலாவியற்படலம் 6) சொன்னலம் கடந்தகாமச் சுவையைஓர் உருவமாக்கி இன்னலம் தெரியவல்லார் எழுதியது என்னநின்றாள் பொன்னையும் பொருவும் நீராள் புனைந்தன எல்லாம்போகத் தன்னையும் தாங்கலாதாள் துகில்ஒன்றும் தாங்கிநின்றாள் (உலாவியற்படலம் 12) மைக்கருங் கூந்தற்செவ்வாய் வாள்நுதல் ஒருத்தி உள்ளம் நெக்கனள் உருகு கின்றாள் நெஞ்சிடை வஞ்சன்வந்து புக்கனன் போகாவண்ணம் கண்ணெனும் புலம்கொள் வாயில் சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் (உலாவியற்படலம் 14) தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற்கமலம் அன்ன தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண்டாரும் அஃதே வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார் (உலாவியற் படலம் 19) மாதுஒருத்தி மனத்தினை யல்லதோர் தூது பெற்றிலன் இன்னுயிர் சோர்கின்றாள் போதரிக் கண்பொலன் குழையப் பூண்முலைச் சீதை எத்தவம் செய்தனளோ என்றாள் (உலாவியற்படலம் 23) கனக நூபுரம் கைவளை யோடுஉக மனம் நெகும்படி வாடிஓர் வாணுதல் அனகன் இந்நகர் எய்தியது ஆதியில் சனகன் செய்த தவப்பயனால் என்றாள் (உலாவியற் படலம் 26) சீதை சபா மண்டபத்துக்கு வருதல் விருத்தம்-18 - தரு-16 சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி வந்தடி வணங்கிச் சுற்ற மணியணி விதான நீழல் |