72 இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவ தென்ன நந்தலில் விளக்கம் அன்ன நங்கையும் நடக்க லுற்றாள் (கோலங்காண் படலம் 23) தொழுந்தகைய மென்னடை தொலைந்துகளி அன்னம் எழுந்திடை விழுந்து அயர்வது என்ன அயலெங்கும் கொழுந்துடைய சாமரை குலாவ ஓர்கலாபம் வழங்குநிழல் மின்னவரும் மஞ்ஞைஎன வந்தாள் (கோலங்காண் படலம் 25) பொன்னின் ஒளி பூவின்வெறி சாந்துபொதி சீதம் மின்னின் எழில் அன்னவள்தன் மேனியது மான அன்னமும் அரம்பையரும் ஆரமிழ்தம் நாண மன்னவை இருந்தமணி மண்டபம் அடைந்தாள் (கோலங்காண் படலம் 28) ஸ்ரீராமர் மணக்கோலங் கொள்ளுதல் விருத்தம் - 19 - தரு-17 அழிவருந் தவத்தினோடு அறத்தை ஆக்குவான் ஒழிவருங் கருணைஓர் உருவு கொண்டென எழுதரு வடிவுகொண்டு இருண்ட மேகத்தைத் தழுவிய நிலவெனக் கலவை சாத்தியே மங்கல முழுநிலா மலர்ந்த திங்களைப் பொங்கிருங் கருங்கடல் பூத்த தாம்எனச் செங்கிடைச் சிகழிகை செம்பொன்மாலையும் தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே ஏதமில் இருகுழை இரவு நண்பகல் காதல்கண் டுணர்ந்தன கதிரும்திங்களும் சீதைதன் கருத்தினைச்செவியின் உள்ளுறத் தூதுவந் துரைப்பன போன்று தோன்றவே (கடிமணப் படலம் 50-52) பந்திசெய் வயிரங்கள் பொறியின் பாடுற அந்தமில் சுடர்மணி அழலின் தோன்றலாற் |