73 சுந்தரத் தோளணி வலயம் தொல்லைநாள் மந்தரஞ் சுற்றிய அரவை மானுமே (கடிமணப் படலம் 55) முகைவிரி சுடரொளி முத்தின் பத்திவான் தொகைவிரி பட்டிகைச் சுடரும் சுற்றிடத் தகைஉடை வாளெனும் தயங்கு வெய்யவன் நகைஇன வெயிலென தொங்கல் நாற்றியே (கடிமணப் படலம் 64) கலியாணச் சடங்கு செய்தல் விருத்தம்-20 - திபதை-2 மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும் சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும் கணிகையர் தொகுவாரும் கலைபல பயில்வாரும் பணியணி இனமுத்தம் பலஇரு நிலமன்னர் அணிநெடு முடியொன்று ஒன்று அறைதலின் உரும் அம்பொன் மணிமலை எனமன்ன வாயிலின் மிடைவாரும் (கடிமணப்படலம் 31, 32) தேர்மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் ஊர்தியில் வருவாரும் ஒளிமணி நிரைஓடைக் கார்மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் (கடிமணப்படலம் 35) இந்திரன் சசியொடு எய்தி னான்இளஞ் சந்திர மௌலியும் தைய லாளொடும் வந்தனன் மலரயன் வாக்கி னாளுடன் அந்தரம் புகுந்தனன் அழகு காணவே நீந்தருங் கடலென நிறைந்த வேதியர் தோய்ந்த நூல் மார்பினர் சுற்றத், தொல்நெறி |