74 வாய்ந்தநல் வேள்விக்கு வசிட்டன் மையற ஏய்ந்தன கலப்பையொடு இனிதின் எய்தினான் தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன் மண்டலம் விதிமுறை வகுத்து மென்மலர் கொண்டுநெய் சொரிந்துஎரி குமும மூட்டினான் பண்டுள மறைநெறி பரவச் செய்தனன் மன்றலின் வந்து மணத்தவிசு ஏறி வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து இன்துணை அன்னமும் எய்தி யிருந்தார் ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் கோமகன் முன்சன கன்குளிர் நல்நீர் பூமக ளும்பொரு ளும்என நீ என் மாமகள் தன்னொடும் மன்னுதி என்னா தாமரை யன்ன தடக்கையின் ஈந்தான் (கடிமணப்படலம் 82-86) வெய்ய கனற்றலை வீரனும் அந்நாள் மையறு மந்திரம் மும்மை வழங்கா நெய்யமை யாவுதி யாவையும் நேர்ந்தே தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் (கடிமணப்படலம் 89) ஸ்ரீராமர் அக்கினி வலம்வருதல் முதலியவைகள் விருத்தம் -21 இடம்படு தோளவ னோடுஇயைய வேள்வி தொடங்கிய வெங்கனல் சூழ்வரு போதின் மடம்படு சிந்தையள் மாறு பிறப்பின் உடம்புஉயி ரைத்தொடர் கின்றதை ஒத்தாள் வலங்கொடு தீயை வணங்கினர் வந்து பொலம்பொரி செய்வன செய்பொருள் முற்றி இலங்கொளி அம்மி மிதித்துஎதிர் நின்ற கலங்கலில் கற்பின் அருந்ததி கண்டார் |