75 மற்றுள செய்வன செய்து மகிழ்ந்தார் முற்றிய மாதவர் தாள்முடி சூடி கொள்ள வனைக்கழல் கும்பிடலோடும் பொற்றொடி யைக்கொடு நன்மனை புக்கான் (கடிமணப்படலம் 90-92) சோபனம் பாடுதல் விருத்தம் -22 - தரு-18 அந்தணர் ஆசி அருங்கல மின்னார் தந்தபல் லாண்டிசை தார்முடி மன்னர் வந்தனை மாதவர் வாழ்த்தொலி யோடு முந்திய சங்கம் முழங்கின மாதோ (கடிமணப்படலம் 87) ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு ஆர்த்தன வண்டினம் ஆர்த்தன வேலை (கடிமணப்படலம் 93) -------- ஸ்ரீராமருக்கும் பரசுராமருக்கும் சம்வாதம் விருத்தம்-23 - திபதை-3 இற்றோடிய சிலையின்திறம் அறிவென்இனி யானுன் பொற்றோள்வலி நிலைசோதனை புரிவான் நசையுடையேன் செற்றோடிய திரள்தோள்உறு தினவும் சிறிதுடையேன் மற்றோர்பொருள் இலையிங்குஇதுஎன் வரவுஎன்றனன் உரவோன் (பரசுராமப் படலம் 18) மானம்மணி முடிமன்னவன் நிலைசோர்வுறல் மதியான் தானந்நிலை உறுவான்று வினைஉண்டது தவிரான் ஆனம்உடை உமையண்ணலை அந்நாள் உறுசிலைதான் ஊனம்உளது அதன்மெய்ந்நெறி கேள்என்றுரை புரிவான் (பரசுராமப்படலம் 25) |