76 உலகெலாம் முனிவற் கீந்தேன் உறுபகை ஒடுக்கிப் போந்தேன் அலகில்மா தவங்கள் செய்துஓர் அருவரைஇருந்தேன் ஆண்டை சிலையைநீ இறுத்தஓசை செவியுறச் சீறிவந்தேன் மலைகுவென் வல்லையாகின் வாங்குதி தனுவை என்றான் (பரசுராமப்படலம் 34) பூதலத் தரசையெல்லாம் பொன்றுவித் தனைஎன்றாலும் வேதவித் தாயமேலோன் மைந்தன்நீ விரதம்பூண்டாய் ஆதலின்கொல்லல் ஆகாது அம்புஇது பிழைப்பதன்றால் யாதிதற்கு இலக்கம்ஆவது இயம்புதி விரைவின்என்றான் (பரசுராமப்படலம் 36) எய்த அம்பு பழுதுஎய் திடாமல்என் செய்தவம் யாவையும் சிதைக்க வேஎனக் கையவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன் மையறு தவமெலாம் வாரி மீண்டதே (பரசுராமப்படலம் 39) ----- ஸ்ரீராமர் அயோத்தியைச் சேர்தல் விருத்தம்-24 எண்ணிய பொருளெலாம் இனிது முற்றுக மண்ணிய மணிநிற வண்ண வண்துழாய்க் கண்ணிய, யாவர்க்கும் களைக ணாகிய புண்ணிய, விடையெனத் தொழுது போயினான் (பரசுராமப்படலம் 40) பூமழை பொழிந்தனர் புகுந்த தேவருள் வாமவேல் வருணனை மான வெஞ்சிலை சேமிஎன் றுதவிதன் சேனை ஆர்த்தெழ நாமநீர் அயோதிமா நகரம் நண்ணினான் (பரசுராமப்படலம் 45) |