77 ஸ்ரீ ஸ்ரீராமஜெயம் இரண்டாவது அயோத்தியா காண்டம் சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீராமரை வேண்டுதல் விருத்தம்-1 வனிதைமணிச் சீதையுடன் அயோத்திமேவி மணவாள ராமன்என இருந்த நாளில் கனிவுபெறப் பரதனைசத் துருக்கனனோடே கைகயன்பால் விடுத்துசின்னாள் கழிந்தபின்பு இனியதச ரதன்வதிஷ்டன் மந்திரி மாரும் இசைந்தபடித் துறந்திட ராகவனைக் கூவித் தனிமகுடம் புனையெனவே அவனுக்கன்பாய்ச் சாற்றுவான் தன்கவலை ஆற்றுவானே தரு-1 மத்தியவாதி ராகம் ஆதிதாளம் பல்லவி இந்தமனுத்தர வேணும் மகனே - ராமா இந்தமனுத்தர வேணும் மகனே (இந்த) அநுபல்லவி இந்த மனுத்தர வேணும் மகனே-ராமச் சந்திர னேபுவிஆளத் தகும் நீஉத் தமனே (இந்த) சரணங்கள் 1. அறுபதி னாயிர வருஷ காலம்-வாழ்ந்தேன் அதிலே காணாதெல்லாங் கண்டறிந்தேன் இந்திர சாலம் பருவதமோ என் காயஸ் தூலம்-இனிப் பார்க்கவே ணும்என்கண்ணாரநீ பாராளும் கோலம்(இந்த) 2. முடியாத மோகாந்த காரம்-இத்தை முதுமையிலும் துறவாமல் இருந்தென்ன சாரம் |